புதிய மின்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

  ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார்.

 உத்தேச கட்டண திருத்தம் 

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதில் ஜூன் முதலாம் திகதி பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவு மற்றும் பிரிவு 17ன் படியே இவை வெளியிடப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Previous articleசரிவடைந்த தங்கம்
Next articleயாழ் தையிட்டியில்  கஜேந்திரன் எம்.பி ஜ தூக்கி சென்ற பொலிசார்!