நெடுந்தீவு கொலை தொடர்பில் சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நெடுந்தீவு அறுவர் கொலை வழக்கின் சந்தேகநபருக்கு எதிர்வரும் யூன் 6ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்போது நெடுந்தீவில் ஜந்து பேர் கொடுரமாக படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் காயமடைந்த இன்னுமொருவருமாக ஆறுபேர் மொத்தமாக உயிரிழந்திருந்தனர்.

இந்த கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

இதற்கமைய இன்று இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது கொலை சந்தேக நபரை அடுத்தமாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Previous articleயாழ் தையிட்டியில்  கஜேந்திரன் எம்.பி ஜ தூக்கி சென்ற பொலிசார்!
Next articleபூமியை ஒத்த கோள் கண்டுபிடிப்பு!