விஜயகலா -மகேஸ் சேனநாயக்கா சந்திப்பாம்?

17 (1)யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பினில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் யாழ்.இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்காவை சந்தித்துள்ளாராம் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

அத்துடன் பலாலியினில் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கினிலுள்ள சில ஆலயங்களையும் பார்வையிட அவர் அவ்வேளை அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி மீதான கொலை முயற்சியை தொடர்ந்து அப்போதிருந்த இராணுவத்தளபதி உடனடியாக இராணுவத்தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து அவ்விடத்திற்குமேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை நட்புறவு ரீதியினில் சந்தித்து உரையாடியதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி யாழ்.மாவட்டத்தின் முதலாவது பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரென கௌரவம் வழங்கியுள்ளார்.

Previous articleஈழத் தமிழரின் குருதிக்கு விலை பேசும்….. கருணாநிதி
Next article21 முறை ஏமாந்த தமிழ் இனம்,எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் ஏமாறலாமா…?