நீர்தேக்க கால்வாயில் தவறி வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு!

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பிரதான நீர்ப்பாசன கால்வாயில் தவறி விழுந்து ஒரு வருடமும் 8 மாத குழந்தையும் உயிரிழந்துள்ளது.

தம்புத்தேகம ராஜாங்கனை யாய 04 பகுதியில் நேற்று (27) நீர்ப்பாசன கால்வாயில் குழந்தை தவறி விழுந்துள்ளது.

தம்புத்தேகம, மலியதேவபுர பகுதியைச் சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்படமையால் பரபரப்பு!
Next articleகனடாவிற்கு உறவினர்களை அழைக்க இருபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!