கனடாவிற்கு உறவினர்களை அழைக்க இருபவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

 கனடாவிற்கு உறவினர்களை அழைத்து வருவதற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குடியேறிகள் தங்களது வாழ்க்கைத்துணை, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை விரைவில் அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிரந்தர வதிவிட உரிமை கோர விரும்பும் குடியேறிகளின் குடும்ப உறுப்பினர்கள் முதலில் விசிட்டர் வீசா மூலம் விண்ப்பம் செய்ய முடியும் என கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.

மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலனை செய்யும் வரையில் அவர் உறவினர்களுடன் தங்கியிருக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விண்ணப்பதாரிகள் நாடு திரும்ப விரும்பமாட்டார்கள் என்ற காரணத்தினால் இந்த வகை விசிட்டர் வீசா வழங்கப்படுவது குறைவாகவே காணப்பட்டது.

புதிய முறையில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் விண்ணப்பதாரிகள் குறித்த தகவல்களை பரிசீலனை செய்து துரித கதியில் வீசா வழங்கப்பட உள்ளது.

விதிவிட வீசா கிடைக்கக் கூடிய சாத்தியமுடையவர்களுக்கு துரித கதியில் தற்காலிக வீசா வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Previous articleநீர்தேக்க கால்வாயில் தவறி வீழ்ந்த குழந்தை உயிரிழப்பு!
Next articleகனடா பல்கலைக்கழகமொன்றில் ரத்து செய்யப்படும் கட்டணங்கள்