சருமம் பாதிப்படைவது எதனால்?

face_tips_003உங்களுடைய சருமம் சீராக இல்லையெனில் என்ன பிரச்சனைகள் என்பதை கவனியுங்கள்.
நீர்ச்சத்து, ஊட்டச்சத்துள்ள உணவு எடுத்துக்கொள்வது சருமத்துக்கு பொலிவைத் தந்தாலும், சருமத்தை பாதிக்கும் விடயங்கள் சில உள்ளன.

அலர்ஜி

பருக்கள், கருவளையம், எண்ணெய் வழிதல், வறண்ட சருமம் போன்ற அலர்ஜிகள் இருப்பின் அவற்றை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு பருவகாலநிலை மாற்றம்கூட அலர்ஜியை ஏற்படுத்தலாம். பூக்களின் மகரந்தம், தூசு, பறவைகளின் சிறகுகள் போன்றவற்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.

இதனால் கண்கள் சிவப்பாகுதல், நீர் வழிதல், கண்களின் கீழ் வீக்கம் போன்ற பாதிப்புகள் வரலாம். எதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிந்து அதைத் தடுக்க வேண்டும்.

வெளியில் சென்றால் ஸ்கார்ஃப், மாஸ்க் போன்றவற்றை அணியலாம். வாரத்தில் இருமுறை படுக்கையின் பெட்ஷீட், தலையணை உறை, திரைசீலைகள் போன்றவற்றை மாற்ற வேண்டும்.

தாமதமாக தூங்கும் பழக்கம்

ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் இரவில் தாமதமாக தூங்கினால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது.

ஆனால் தினமும் தாமதமாக தூங்கும் பழக்கம் இருந்தால், தோல் சுருக்கம், அஜீரண கோளாறுகள் போன்றவை வரும்.

அடுத்த நாள் சருமத்தில் எந்தவித புத்துணர்ச்சியும் இருக்காது. கண்கள் சோர்ந்துபோய், பொலிவின்றி இருக்கும். ரத்த ஒட்டம், ரத்த நாளங்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் பாதிக்க கூடும்.

இரவில் 9-10 மணிக்குள் தூங்க செல்வது நல்லது. தூங்கும் முன் கண்களில் ஐ பேட் கட்டிக் கொண்டு தூங்குங்கள். கண் குளிர்ச்சியடையும். மறுநாள் காலை கண்கள் பிரெஷ்ஷாக இருக்கும். சரும சுருக்கங்கள் வராமல் தவிர்க்க முடியும்.

குடி மற்றும் புகைபழக்கம்

குடி மற்றும் புகையால் உடலில் நச்சுக்கள் சேரும். சிலருக்கு உயிரையே குடிக்கும். நுரையீரலும், கல்லீரலும் அதிகமாக பாதிக்கும்.

கல்லீரல் பாதித்தால் முதலில் அவற்றின் அறிகுறியாக வெளிப்படுவது சருமத்தில் பிரச்னை. கண்கள் சிவந்து போகும், உதடு கருப்பாகும், முகத்தில் சோர்வு கூடிவிடும்.

தவறான உணவு பழக்கம்

அதிக மசாலா மற்றும் எண்ணெய் சேர்த்த உணவுகள், சீனா உணவுகள் போன்றவை உடலை அதிகம் பாதிக்க கூடியவை.

கிரில்டு, எண்ணெய்யில் பொரிப்பது, சாஸ் சேர்த்து சமைப்பது போன்றவற்றால் உடலில் அதிகளவு சோடியம் சேரும்.

கெட்டக் கொழுப்பு அதிகரிக்கும். முகத்தில் நீர் கோர்த்து இருப்பது போல மாறிவிடும். அதிகபடியான மசாலா உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் இது. சாலட், ஆவியால் வேக வைக்கப்பட்ட உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடுவதே நல்லது.

Previous articleநாற்காலி போட்டு தான் ஹெலிகாப்டர் ஷாட் ஆட வேண்டும்: நிருபரை கலாய்த்த டோனி
Next article”உடனடியாக ஒரு காதலி தேவை’’: வீட்டிற்கு வெளியே விளம்பரம் செய்த கனடிய நபர்