டி20 தொடரை வென்ற இந்தியா: தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை

ashwin_005இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இலங்கையை கலங்கடித்த அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியை 9 விக்கெட்டுகளால் வென்ற இந்திய அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வின் 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 8 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

அஸ்வின் கடந்த 2014ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் எடுத்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

மேலும், முதல் 6 ஓவர்களுக்குள் இந்த 4 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி விட்டார்.

டி20 கிரிக்கெட்டில் முதல் 6 ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆவார்.

இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் சுலிமான் பென் 2010ம் ஆண்டு இந்த சாதனையை செய்துள்ளார்.

Previous articleமைத்திரி வைத்த வெடிகுண்டு! சிதறி போன மஹிந்தவின் கனவு
Next articleமா.கா.பாவிற்கு வாழ்த்து தெரிவித்த ரம்யா, ப்ரியா