மலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு

st3நுவரெலியா – ராகலை – சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் தருமசீலன் புதிய வகையிலான தலைகவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளார்.

முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்படும் இந்த தலை கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது. இந்த கண்டு பிடிப்புக்காக மாணவனுக்கு கொழும்பு ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைகழகத்தினால் கௌரவிக்கபட்டு சான்றிதலும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனை சந்தித்து அவரது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பில் மாணவனிடம் வினவிய போது, எனது விருப்பம் அப்துல்கலாம் போன்று ஆவது. இதுவே எனது நீண்ட நாள் கனவு. சிறுவயது முதல் சிறு சிறு விஞ்ஞான சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருந்து வருகின்றேன்.

14ஆம் வயதில் இலகு சமயல் உபகரணம் கண்டுபிடித்து நுவரெலியா மாவட்டத்துக்கான இரண்டாம் இட சான்றிதலை பெற்றேன். அடுத்து எனது 15வது வயதில் சிறிய விமானத்தை வடிவமைத்து அதற்கும் நுவரெலியா மாவட்டத்தில் 2ம் இடத்திற்கான சான்றிதலை பெற்றேன்.

எனது அடுத்த கண்டுபிடிப்பு சூரிய சக்தியில் இயங்கக் கூடிய இந்த தலைக் கவசம்.

இதில் இருக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி ஆக்கி மூலம், பொருத்தபட்ட விசிறி சுழலும் போது தலைக வசம் குளிராக இருக்கும் இதனால் முடி விழுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும். இதற்காக மருந்துகளுக்கு செலவு செய்யும் செலவுகளை சேமிக்கக் கூடியதாகயிருக்கும்.

இனி வரும் காலங்களில் எனது அடுத்த கண்டுபிடிப்புக்களாக மனிதனால் இயங்கக் கூடிய ரொபோ, எரிபொருள் இல்லாமல் இயங்கக் கூடிய மோட்டார் வண்டி ஆகியன உள்ளன.

எனது எதிர்கால பிரயோசன மிக்க கண்டுப்பிடிப்புக்களுக்கு இன்னும் தேவையான அனைத்து உதவிகளையும் கல்வி சார்ந்த அமைப்புக்களும் பொது அமைப்புக்களும் தனியார் அமைப்புக்களும் வழங்குமாயின் எனக்கு செய்யும் மிப்பெரிய உதவியாக இருக்கும், என்றார்.

Previous articleமீண்டும் ஆபத்தா…?? வானிலை நிலையம் எச்சரிக்கை…!
Next articleகைதிகளுக்கு மன்னிப்பு இல்லை: ஹூசைனின் கருத்தால் விக்னேஸ்வரனுக்கு சங்கடம்