கைதிகளுக்கு மன்னிப்பு இல்லை: ஹூசைனின் கருத்தால் விக்னேஸ்வரனுக்கு சங்கடம்

unதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது என்ற ஜெனீவா மனித உரிமை ஆணையாளர் செய்த் ரா-அத் அல் ஹூஸைன் கருத்தை அங்கீகரித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பினால் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக கண்டனம் வெளியிடப்பட்டவுள்ளதாகவும், எதிர்வரும் 17 ஆம் திகதி மகஜர் ஒன்றையும் கையளிக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

கடந்த வாரம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட ஆணையாளர், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளது எனவும், கைதிகளின் விடுதலை விடயம் தொடர்பில் ஸ்ரீலங்காவின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுமாறும் கூறியிருந்தார்.

ஆணையாளரின் இந்த கருத்தை வடமாகாண முதலமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார். இருப்பினும் ஆணையாளரின் ஸ்ரீலங்கா விஜயத்தினால் தமக்கு சாதகமான நிலை ஏற்படும் என கைதிகள் எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.

இதேவேளை, போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு ஸ்ரீலங்காவின் நீதித்துறை கட்டமைப்பு போதுமானது என ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் அல் ஹூசைன் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கு எதிராகவும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோசலிச முன்னணி ஆகிய இடதுசாரி கட்சிகள் மற்றும் சமூக அபிவிருத்தி நிலையம், மனித உரிமைகள் நிலையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளினால் ஆணையாளருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா சபையின் தலைமை அலுவலகத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி மகஜர் ஒன்றையும் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு
Next articleயாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! 3 சந்தேக நபர்களுக்கு பிடியாணை