மேனேஜர் மேடமும், பெண்களும் பொலிசாரிடம் சிக்கினர்.

girl_arsitஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியை வெலிக்கட பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

வெலிக்கட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கைமய இந்த சுற்றிவளைப்பு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபச்சார விடுதி வெலிக்கட, புத்கமுவ வீதியில் இயங்கி வந்ததாகவும், இதை ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் நடாத்திச் சென்ற மேனேஜர் பெண் ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 4 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

23, 27, 28 மற்றும் 31 வயதான இந்தப் பெண்கள் நுவரெலியா, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleபீப் பாடல் குறித்து அதிரடி தீர்ப்பு!
Next articleகிளிநொச்சி இளைஞன் கண்டு பிடிப்பில் சாதனை…!