இலங்கையில் தந்தை உட்பட குடும்­பத்­த­வர்­க­ளினால் 17 வரு­டங்­க­ளாக துஷ்­பி­ர­யோ­கம் செய்யபட்டு வந்த யுவதி…..

rதந்தை உள்­ளிட்ட குடும்ப அங்கத்­த­வர்­களால் கடந்த 17 வரு­டங்க­ளாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்துக்கு உட்­ப­டுத்­தப்பட்டு வந்த 23 வய­தான யுவதி ஒருவர் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக சந்­தேக நபர்கள் ஐவரை பயா­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

தனக்கு ஐந்து வய­தாக இருக்கும் போது முதலில் தனது தந்­தையால் தான் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அதன்­பின்னர் தனது மூத்த சகோ­த­ர­னி­னா லும், மைத்­துனன், மைத்­துனின் சகோ­தரன், சித்­தியின் மகன் ஆகியோர் தன்னை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் யுவதி பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ள நிலை­யி­லேயே அந்த ஐவ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்த சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது

பயா­கல பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்ற 23 வய­து­டைய யுவதி ஒருவர், அங்கு மகளிர் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரின் கையைப் பிடித்­த­வாறு அழுது புலம்பி தனது சோகக் கதையை கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து குறித்த யுவ­தியை பயா­கல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் துஷார சில்­வா­விடம் பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் அழைத்துச் சென்­றுள்ளார்.

இதன் போது பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யி­டமும் குறித்த யுவதி தனது சோகக் கதையை தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து யுவ­தியின் முறைப்­பாடு அவ­ரது வாக்குமூலத்­துக்கு அமை­வாக பொலிஸ் பதிவுப் புத்­த­கத்தில் பதி­னா­றரை பக்­கங்­களில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. தான் தற்­போது திரு­மணம் முடித்­துள்ள நிலையில் தனது கணவர் தன்னை தற்­போது சந்­தேகப் பட ஆரம்­பித்­து­விட்­ட­தா­கவும் அத­னா­லேயே தான் பொலிஸ் நிலையம் வந்­த­தா­கவும் குறித்த யுவதி அந்த முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து குறித்த யுவ­தியை விசேட வைத்­திய பரி­சோ­த­னை­க­ளுக்­காக களுத்­துறை நாகொட வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பிய பொலிஸார் அந்த யுவ­தியை சிறப்பு மன நல வைத்­தியர் ஒரு­வ­ரி­டமும் முன்­னி­லைப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே சந்­தே­கத்தின் பேரில் முறைப்­பாட்டில் பெய­ரி­டப்­பட்­டுள்ள ஐவ­ரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Previous articleகிளிநொச்சி இளைஞன் கண்டு பிடிப்பில் சாதனை…!
Next articleஐ எஸ் அமைப்பில் செல்பவர்கள் யார் தெரியுமா….?? வெளியாகும் புதுத் தகவல்….??