யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து பொலிஸாரால் பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ். பொஸ்கோ பாடசாலையில் இந்தச் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெற்றோர்களுடைய மோட்டார் சைக்கிளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் தொடர்பான ஸ்ரிக்கர்களும் பொலிஸாரால் ஒட்டப்பட்டன.
மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்து செல்லும் போது தலைக் கவசத்தை அணியவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.