மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு குளத்தின் அருகில் குசலான் மலை அமைந்துள்ளது.
மிகப்பண்டைய காலம் முதல் இம்மலையில் முருகவேல் வழிபாடும், நாக வழிபாடும் நிலவியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.
இங்கு ஆதி தமிழர் பொறித்த ஏழு பிராமி கல்வெட்டுக்களும், மற்றும் கற்சுனை ஒன்றும் நாகக்கல் ஒன்றும் ஆதி தமிழர் வாழ்ந்த கற்குகைகள் சிலவும் உள்ளன.
இங்கு முருகன் இயற்கையாக காட்சி தந்துள்ளதாக கூறும் அங்குள்ள மக்கள் பல ஆபத்துக்களில் தங்களைக் காத்ததாகவும் முருகனின் அருள் நிறைந்துள்ளதாகவும் மேலும் மக்கள் கூறுகின்றனர். இங்கு முருகனின் சக்தியை இன்றும் உணர முடிவதாக மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு வரலாற்று தென்மை வாய்ந்த ஆலயங்களை அழிப்பதில் அரசுகள் துணையாக இருந்தாலும் தமிழ் அரசியல் தலைவர்களும் கண்டு கொள்வதில்லை என மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.