காலியில் பிடிக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் வெளியாகும் அதிர்ச்சிகர பின்னணி வெளியாகியது

loves_dathகடந்த 14 ஆம் திகதி புகையிரதம் முன் பாய்ந்து பெண்ணொருவர் தற்கொலை செய்த சம்பவம் ரிச்மண்ட் கந்த புகையிரத மார்கத்தில் இடம்பெற்றிருந்தது.

35 வயது பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

மேற்படி தற்கொலைக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

அவர் காலி , படகன்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்.35 வயதான அவருக்கு 16 வயதில் பெண் பிள்ளையொன்றும் உள்ளாராம்.

குறித்த பெண்ணின் கணவர் வங்கியொன்றில் பணியாற்றி வந்ததாகவும் , அவர் வெறொரு பெண்ணொருவருடன் வைத்திருந்த தொடர்பே தற்கொலைக்கான காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் அருகில் வசிக்கும் பெண்ணொருவருடனேயே குறித்த பெண்ணின் கணவர் தொடர்பைப் பேணிவந்துள்ளார்.

இதனை அயலவர்களும் அறிந்து வைத்துள்ளனர்.

சம்பவதினத்தன்று தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதனை கண்டமையால் அப் பெண் மனமடைந்து தற்கொலை முடிவை எடுத்த தாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleமட்டக்களப்பு கரடியனாற்றில் அதிசய முருகன்
Next articleவிக்னேஸ்வரனை வீழ்த்த சந்திரிகாவின் வியூகம்!