நெய்மரின் படகு, விமானம் உட்பட ரூ. 310 கோடிகள் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!

neymer_001வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் ரூ.310 கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்மர் 2011ம் ஆண்டு முதல் 2013 வரை வருமான வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நெய்மரின் ரூ.310 கோடிகள் சொத்துக்களை முடக்கம் செய்து நீதிபதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து நெய்மர் மேல்முறையீடு செய்தார், ஆனால் அந்த மனுவை பெடரல் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் தற்போது அவரது ரூ.192 மில்லியன் ரியால்கள் அதாவது சுமார் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

சொத்துக்களை முடக்குவதற்கான வாரண்டையும் நீதிமன்றம் பிறப்பித்தது.

முடக்கப்பட்ட சொத்துகளில் அவரது வீடு, வாகனங்கள் ஆகியவற்றுடன் அவருக்கு சொந்தமான ஒரு படகு மற்றும் விமானமும் அடங்கும்.

Previous articleகையடக்கத் தொலைபேசிக் கட்டணம் அதிகரிப்பு
Next articleசகோதரனை காப்பாற்ற 90,000 டொலர் நன்கொடை வசூலித்த 6 வயது சிறுமி: கனடாவில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்