28 ஆண்டுகள் கழித்து பி.ஏ. பட்டம் பெற்ற நடிகர் ஷாருக்கான்

sharu_degree_001பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கான் 28 ஆண்டுகள் கழித்து தான் படித்த கல்லூரிக்கு சென்று பி.ஏ. பட்டத்தை பெற்றுள்ளார்.
டெல்லியில் பிறந்து வளர்ந்தவரான நடிகர் ஷாருக்கான் அங்குள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தார்.

1988–ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய அவர், பட்டம் பெறாமல் விட்டு விட்டார்.

பின்னர் பாலிவுட்டில் நுழைந்து, முன்னணி நட்சத்திரமாகி விட்டார்.

இந்நிலையில் தனது ‘பேன்’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக டெல்லி சென்ற ஷாருக்கான் தான் படித்த ஹன்ஸ்ராஜ் கல்லூரிக்கு நேற்று சென்றுள்ளார்.

அங்கு, தனது பி.ஏ. பட்டத்தை கல்லூரி முதல்வர் ராமா சர்மாவிடம் இருந்து பெற்றார். இது குறித்து ஷாருக்கான் கூறியதாவது, இது எனக்கு ஒரு சிறப்பான தருணம்.

1988–ம் ஆண்டு கல்லூரியை விட்டு வெளியேறிய நான் திரும்பவும் வந்திருக்கிறேன்.

நான் இப்போது தவற விட்டது, என் குழந்தைகளைத்தான். நான் அவர்களுக்கு எனது கல்லூரியின் ஒவ்வொரு மூலையையும் காட்ட விரும்பினேன்.

ஆனால் அவர்கள் இப்போது என்னுடன் வரவில்லை என்று தெரிவித்தார்.

கல்லூரியின் முதல்வர் ராமா சர்மா பேசுகையில்,இத்தனை ஆண்டுகள் கழித்து நாங்கள் ஷாருக்கிற்கு பட்டம் அளிப்பதில் மிகவும் மகிழ்கிறோம்.

அவரது பட்டத்தை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தோம்.

ஒரு சூப்பர் ஸ்டாரை மாணவராக பெற்றிருந்ததற்கு இந்த கல்லூரி பெருமிதம் கொள்கிறது என்று கூறினார்.

Previous articleதைரியமாக அரசியல் களத்தில் இறங்கவிருக்கும் விஜய்- ஆச்சரியத்தில் கோலிவுட்
Next articleமகிந்தவுக்கு பதிலடி கொடுக்க வியூகம் அமைக்கும் மைத்திரி!