காற்றுக்கூட உட்புகாத அறையில் எனது மகன்!

indexசிறைச்சாலையில் காற்றுக்கூடப் புக முடியாத விசேட அறையில்தான் எனது மகன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில், யோசித தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி பாதுகாப்புப் பிரதேசமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கதிரையிலிந்து என்னைக் காப்பாற்றினாலும், எதிர்வரும் நாள்களில் பெரும்பாலானவர்கள் மின்சாரக் கதிரைக்குச் செல்ல வேண்டி ஏற்படும். இவ்வாறு மின்சாரக் கதிரைக்குச் செல்லவுள்ளவர்களையும் காப்பாற்ற அரசு செயற்படவேண்டும் என்பதோடு, கண் மூக்குத் தெரியாமல் முன்னெடுக்கப்பட்டு வரும் பழிவாங்கல்களையும் நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறைச்சாலையில் காற்றுக்கூட புக முடியாத விசேட அறையில் எனது மகன் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கினால், அவர்கள் புதிதாக ஒரு கட்சியை உருவாக்குவது உறுதியானது. இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தான் பாதிப்பு ஏற்படும் என்றார்.

Previous articleமகிந்தவுக்கு பதிலடி கொடுக்க வியூகம் அமைக்கும் மைத்திரி!
Next articleஇந்தியாவை எச்சரிக்கிறார் பசில்