துடுப்பாட்ட செய்தி ஒருநாள் தரவரிசை: கோஹ்லி, அஸ்வின் ஆதிக்கம்.. 6வது இடத்தில் டில்ஷான்

kholi_001ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இதில் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலிலந்தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.

இந்திய வீரர்களில் விராட் கோஹ்லி 2வது இடத்திலும், ரோஹித் சர்மா 5வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

ஷிகர் தவான் 2 இடங்கள் சறுக்கி 9வது இடத்தில் உள்ளார். இந்திய அணித்தலைவர் டோனி 12வது இடத்தில் இருக்கிறார்.

இலங்கை வீரர்களில் தொடக்க வீரரான டில்ஷான் மட்டும் முதல் 10 இடங்களில் இருக்கிறார். அவர் 6வது இடத்தில் உள்ளார். இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் 22வது இடத்தில் இருக்கிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய தரப்பில் டாப்-10 இடத்தில் அஸ்வின் மட்டுமே உள்ளார். அவர் 10வது இடம் வகிக்கிறார்.

Previous articleஇந்தியாவை எச்சரிக்கிறார் பசில்
Next articleநந்திக்கடலில் இராணுவம், முல்லை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர் கூட்டமைப்பு நித்திரை!