தெறி பட சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்த ஷெரிப்

theri005விஜய்யின் தெறி படத்தின் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அண்மையில் வெளியான இப்பட டீஸரை ரசிகர்கள் தெறிக்கவிட்டனர். இந்நிலையில் படத்தில் விஜய்க்கு நடனம் சொல்லி தருவது மிகவும் சவாலான விஷயம் என்று கூறியுள்ளார் டான்ஸ் மாஸ்டர் ஷெரிப்.இதுகுறித்து அவர் பேசுகையில், நான் தெறி படத்தில் மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளேன். ஒரு பாட்டில் விஜய், சமந்தா, ஏமி ஆகியோர் ஆடுவார்கள். மற்றொரு பாட்டில் விஜய்யும், ஏமியும் ஆடுவார்கள்.ஒரு பாடலுக்கு விஜய்யும், நைனிகாவும் ஆடுவார்கள். நைனிகா டான்ஸ் ஸ்டெப்பை புரிந்து கொண்டு ஆட நேரம் எடுத்தார். விஜய் பொறுமையாக அந்த குழந்தையுடன் ஆடினார். கேமராவுக்கு பின்னாலும் அப்பா விஜய்யும், மகள் நைனிகாவும் மிகவும் அன்பாக பழகுவார்கள். விஜய் போன்ற சிறப்பான டான்ஸருக்கு ஸ்டெப்ஸ் கற்றுக் கொடுப்பது சவாலான விஷயம், எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்ஸையும் அவர் எளிதில் ஆடிவிடுவார் என்றார் ஷெரிப்.

Previous articleயாழ். நடேஸ்வராக் கல்லூரி அண்டிய பகுதிகள் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது!
Next articleஇலங்கை மக்களினது பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்கா பணியாற்றி வருகிறது