வங்கியின் இரண்டாவது தளத்தில் மறைந்திருந்த மர்ம மனிதன்: கொள்ளையிடும் திட்டம்?

surrey_robbery_002கனடாவில் வங்கி ஒன்றின் இரண்டாவது தளத்தில் மர்ம மனிதர் மறிந்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் Surrey பகுதியில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் இரண்டாவது தளத்தில் மர்ம மனிதர் மறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து வங்கி செயல்பாடுகளை நிறுத்தி வைத்த நிர்வாகம் உடனடியாக பொலிசாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் சிறப்புப் படையினர் மறைந்திருக்கும் நபருடன் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.

ஆனால் பல மணி நேரம் அதிகளால் தொடர்பு கொண்டும் எவ்வித பதிலும் வராதது கண்டு, சிறப்புப்படையினர் உள்ளே புகுந்துள்ளனர்.

ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த சிறப்புப்படையைனர் மறைந்திருந்த அந்த கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் வங்கிக்குள் மறைந்திருந்த காரணம் குறித்து விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என கூறப்படுகிறது.

பரபரப்பான பகுதியில் இயங்கி வரும் இந்த வங்கியில் இருந்து கொள்ளையிடும் நோக்கில் உள்ளே புகுந்தாரா எனவும்,

தீவிரவாத நடவடிக்கையின் ஒருபகுதியாக மறைந்திருந்தார என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleசிவப்பு அட்டை வழங்கிய நடுவரை சரமாரியாக சுட்டுக்கொன்ற கால்பந்து வீரர்!
Next articleகடும் குளிரில் கம்பீரமாக நடந்த மைத்திரி…