இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான திரிமன்னே தனது பழைய நினைவுகளை பற்றி பேசியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்த திரிமன்னே தனது குடும்பம், ஆரம்ப காலத்தில் சந்தித்த சவால்கள் என பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
தன்னுடைய மறக்க முடியாத இன்னிங்ஸ் தொடர்பாக பேசிய திரிமன்னே, பலப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன்.
ஆனால் சிட்னியில் நடந்த டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ஓட்டங்கள் எடுத்ததை மறக்க முடியாது.
அந்த டெஸ்ட் தொடரில் நான் இல்லை. இருப்பினும் சங்கக்காரா காயமடைந்த நிலையில், அவசரமாக வரவழைக்கப்பட்டேன்.
அதிகமாக பயிற்சியும் இல்லாமல் களமிறங்கிய நான் முதல் இன்னிங்சில் 98 ஓட்டங்கள் குவித்தேன்.
அதேபோல் ஆசியக்கிண்ண தொடரின் முதல் போட்டியில் சதம் விளாசியதையும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதையும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.