விஜய்யால் போக்கிரிராஜா தள்ளிப்போகிறதா? – விளக்கம் தந்த தயாரிப்பாளர்

puli_pokiraja001 (1)புலி படத்தின் தோல்விக்கு பிறகு பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் போக்கிரிராஜா.இப்படத்தை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை எடுத்த ராம்ப்ரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்ஷிகா நடித்துள்ளனர். முதலில் இப்படத்தை அடுத்த வாரம் 26ம் தேதி வெளிவருவதாக அறிவித்திருந்தனர்.இதை கேள்விப்பட்டு, போக்கிராஜா படத்துக்கு விநியோகஸ்தர் தரப்பில் தடை விதிக்கப்போவதாக செய்திகள் வந்தன. புலி படத்தால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு, தயாரிப்பில் தரப்பில் மேல்முறையீடு சென்ற போது எந்த தகவலும் இப்போதுவரை வரவில்லையாம், ஆதலால் தான் தடை செய்யப்போவதாக சொல்லப்படுகிறது.இதை பற்றி ஒரு பிரபல வார இதழ் பி.டி.செல்வகுமாரிடம் கேட்டபோது, அப்படி எந்தவொரு தகவலும் எங்களுக்கு வரவில்லை, சில தொழில்நுட்ப வேலைகள் காரணமாக பிப்ரவரி 26ம் தேதி வெளிவரவேண்டிய படம் மார்ச் 4ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறோமே தவிர வேறொன்றும் இல்லை என்றார்.

Previous articleசங்கக்காரா இடத்தில் களமிறங்கி அவுஸ்திரேலியாவை மிரட்டியதை மறக்க முடியாது: திரிமன்னே
Next articleகுடாநாட்டில் மீண்டும் ரவுடிகளின் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சத்தில் !