குடாநாட்டில் மீண்டும் ரவுடிகளின் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சத்தில் !

d761e054becc5e59f9f74abfbf3c0c3bவாள், கோடரிகளுடன் ஆயுதக்குழு ஒன்று, வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ் தரை துரத்தித் துரத்தி தாக்கியமையால் நேற்றிரவு தாவடியில் பதற்ற நிலை காணப்பட்டது. குறித்த குடும்பஸ்தர் காயத்துடன் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றின் மதில் பாய்ந்து ஓடித்தப்பித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அடாவடிக் குழு, அவரைத்தேடி அடாவடித்தனத்தில் ஈடுபட்டது. அதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் வீட்டிலிருந்த சிறுமி அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்துள்ளார். அத்துடன், அந்த ஆயுதக்குழு தாம் துரத்திச் சென்ற குடும்பஸ்தர் தப்பியோடியதால், அவரது மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் விசாரணையின்போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நவாலியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படும் குடும்பஸ்தர், சிறுவன் ஒருவருடன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் சென்று வீடு திரும்பும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Previous articleவிஜய்யால் போக்கிரிராஜா தள்ளிப்போகிறதா? – விளக்கம் தந்த தயாரிப்பாளர்
Next articleமுல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் விபரம் தேவை !