கென்ட் பகுதியில் வட்டமிட்டது பறக்கும் தட்டு? மர்மமான வெட்டம் தெரிந்ததால் அதிர்ச்சி!

kent_overufo_003பிரித்தானியாவின் கென்ட் மாகாணத்தில் பறக்கும் தட்டு வட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கென்ட் மாகாணத்தில் மர்ம வெளிச்சத்துடன் பறக்கும் தட்டு வட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மர்ம வெளிச்சத்தை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மர்ம வெளிச்சத்துடன் பறக்கும் தட்டு வட்டமிட்டதை அப்பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

ஆனால் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் பொதுமக்களின் இந்த கூற்றை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளதுடன், அதுபோன்ற எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சிலர் அப்பகுதியில் ராணுவ கூட்டு நடவடிக்கை எதுவும் நடந்திருக்கலாம் எனவும், அதனால் இதுபோன்ற மர்ம வெளிச்சம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், கென்ட் பகுதியில் தற்போது அந்த தேவை ஏற்படவில்லை என்றுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு Matt Law என்பவர் Dymchurch எனும்பகுதியில் இரவில் இதுபோன்ற மர்ம வெளிச்சம் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

தமது வாகனத்திம் நேர் மேலே அந்த தட்டு நின்றதாகவும், ஆனால் தாம் வாகனத்தை விட்டு வெளியே வந்த பின்னரும் அதில் இருந்து எந்த சத்தமும் வெளிவரவில்லை என்றார்,

ஆனால் திடீரென்று அந்த தட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர்
Next articleஆயுர்வேத மசாஜ் நிலைய போர்வையில் விபச்சார விடுதி