குடாநாட்டு வான்பரப்பில் தொடர்ந்து வட்டமிடும் கிபிர்! பதற்றத்தில் மக்கள்!

keperயாழ்.குடாநாட்டில் 7வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை மும்முறை வட்டமிட்டுள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

நேற்று முன்தினம் கூட பிற்பகல் 2.10 மணியளவில் இந்த கிபிர் விமானம் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பேரிரைச்சலுடன் பறந்தது.

அன்று பெரிதாக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றவில்லை ஆனால் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை கிபிர் போர் விமானம் வட்டமிட்டதால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவலி.வடக்கில் மிகுதி காணிகள் விரைவில் விடுவிப்பு
Next articleஏ9 மாங்குளம் வீதியில் பயங்கர விபத்து…! பலர் படுகாயம்