காதலியின் பதில் இல்லாததால் காதலனிற்கு நடந்த சோகம்…

loves2காதலர் தினம் அன்று காதலி தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதால் இளைஞர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, பெப்ரவரி 14 அன்று காதலர் தினம் உலகெங்கிலுமுள்ள காதலர்களால் கொண்டாடப்பட்டது. இந் நிலையில் மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள கிராமம் ஒன்றில் இளைஞர் ஒருவர் காதலர் தினமன்று தனது காதலியுடன் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றுள்ளார்.

இளைஞன் காதலியின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போதிலும் காதலியிடமிருந்து பதிலோ குறுஞ்செய்தியோ வராத காரணத்தினால் மனமுடைந்த காதலன் வீட்டில் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

நஞ்சருந்திய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, கல்முனைப் பிரதேசத்தில் காதலர் தினமன்று ஓடிப்போய் திருமணம் செய்வதற்கு எத்தனித்த காதல் ஜோடி ஒன்றின் திட்டம் பெற்றோர்களின் எதிர்ப்புக்காரணமாக பிரிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.

கல்முனை தமிழ் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பான நீலாவணையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பிலுள்ள யுவதி ஒருவருக்கும் கல்முனையிலுள்ள தனியார் லீசிங் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஒரு இளைஞனுக்கும் இடையில் கடந்த ஒரு வருடகாலமாக காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த காதலனும் காதலியும் பெப்ரவரி 14 காதலர் தினமன்று பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மருதமுனை பிரதேசத்தில் வைத்து யுவதியின் உறவினர்களால் தடுக்கப்பட்ட காதல் ஜோடியை இடை நடுவில் பிரித்தெடுத்துச் சென்றனர்.

யுவதியை காதலிக்கும் இளைஞன் உறவினர்களால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

Previous articleகலக்கிய சனத் ஜெயசூரியா.. ஆதிக்கம் செலுத்தும் டோனி: களைக்கட்டப்போகும் ஆசியக்கிண்ணத் தொடர்
Next articleதிருமலை மைதானத்தில் மனித எச்சங்களில் தொடரும் மர்மம்