
திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு பிரச்சார பீரங்கியாகி பல மேடைகளில் முழங்கி வந்தார். இந்நிலையில், ஒரு முன்னணி பத்திரிகை, குஷ்புவையும், திமுக தலைவர் கருணாநிதியையும், பெரியார், மணியம்மை போல சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தது. இதன்பிறகு, குஷ்புவிற்கு திமுகவின் உள்ளே எதிர்ப்பு பெருகியது. பொது இடங்களில் வைத்து குஷ்பு மீது செருப்பு வீச்சு தாக்குதல்களும் அரங்கேறின.
திமுக-காங். கூட்டணி
இந்நிலையில், திமுக-காங்கிரஸ் கட்சிகள் வரும் சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியை குலாம்நபி ஆசாத்-கருணாநிதியின் சந்திப்பு உறுதி செய்த உடனேயே, கருணாநிதி, குஷ்பு குறித்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவின.
கார்ட்டூன் குஷ்பு
காங்கிரசில் இணைந்தபோது, அந்த செய்தியை கேட்டு கருணாநிதி மகிழ்ச்சியடைந்ததாகவும், அடுத்த தேர்தலில் காங்கிரசோடு திமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்ததாகவும், கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர், கார்ட்டூன் வரைந்திருந்திருந்தார். அந்த கார்டூனும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
அப்பா மாதிரி
இந்த கார்ட்டூனை செந்தழல் ரவி என்ற டிவிட்டர் பயனாளி, ஷேர் செய்திருந்தார். அதில் பாலாவுக்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார். இந்த டிவிட்டை ரீடிவிட் செய்த குஷ்பு, “இந்த நபர் அவரது தாய் போட்டோவை வரைவதற்கு பதிலாக என் போட்டோவை போட்டுவிட்டார். அவருக்கு, தந்தை/மகள் உறவு குறித்த புரிதல் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
பொண்ணுக்காக மகிழ்ச்சி
இதைப்பார்த்த சில நெட்டிசன்கள், டிவிட்டரில் குஷ்புவை வம்புக்கு இழுத்துள்ளனர். சுபாஷ் என்ற நெட்டிசன், அந்த கார்ட்டூனிஸ்டும் உங்களை தந்தை-மகள் என்றுதான் கூறியுள்ளார். பொண்ணு இருக்கும் கூட்டணியில் சேர்ந்தால் தந்தைக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
பார்வையில தப்பு
பிரதீப் குமார் என்ற நெட்டிசன், குஷ்புவுக்கு காமாலை கண் போலும். எனவேதான், கண்டதெல்லாம் அவருக்கு மஞ்சளாக தெரிகிறது என்று கூறி, அந்த கார்ட்டூனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சீறிய குஷ்பு
இதையெல்லாம் பார்த்து மேலும் கோபமடைந்த குஷ்பு, அப்படியென்றால், உங்க அக்கா, தங்கச்சி, அண்ணி போட்டோக்களை போடுங்களேன் என்று கூறி சீறினார். இருப்பினும் அசரவில்லை, நெட்டிசன்கள், எங்க அக்காவே நீங்கதான் என கூறி கலாய்க்க ஆரம்பித்தனர். இதெல்லாம் எங்க போய் முடியுமோ?