என்னை முடிக்காமல் விடமாட்டார்கள் பீதியடையும் மஹிந்த

mr3எந்த வகையிலேனும் என்னையும் எனது குடும்பத்தையும் குற்றவாளியாக்கி தண்டிக்கும் நோக்கம் மட்டுமே நல்லாட்சிகாரர்களுக்கு உள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற என்னையும் புலிகளுடன் ஒப்பிட்டு பொய்யான ஆதாரங்களை வெளியிடக்கூட முயற்சிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

எந்தவித ஆதாரமும் இல்லாது என்னையும் எனது குடும்பத்தையும் சிறையில் அடைக்கும் பலமான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று பாரிய குற்றங்கள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் அளித்துவிட்டு நிலையில் அதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Previous articleகருணாநிதி பற்றி தப்பா பேசாதீங்க: சீறும் குஷ்பு
Next articleஇலங்கை வான் பரப்பில் மற்றுமொரு கூகுள் பலூனை செலுத்த முடிவு…!