ஆசியக்கிண்ணம், டி20 உலகக்கிண்ணம்: மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு

sl_team_001ஆசியக்கிண்ணம் மற்றும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 24ம் திகதி தொடங்குகிறது. அதேபோல் டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் மார்ச் 8ம் திகதி தொடங்குகிறது.

இவ்விரு போட்டி தொடர்களில் பங்கேற்கும் வீரர்களை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து விட்டன. ஆனால் இலங்கை மட்டும் அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் காயத்தால் அவதிப்பட்ட பல சீனியர் வீரர்களுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

இலங்கை அணி வீரர்கள் விபரம்:-

லசித் மலிங்கா (அணித்தலைவர்), அஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், திலகரத்னே டில்ஷான், நிரோசன் டிக்வெல்லா, ஷீகன் ஜெயசூர்யா, மிலின்டா சிறிவர்த்தனா, தசுன் சனகா, சமரா கப்புகெதரா, நுவான் குலசேகரா, துஷ்மந்தா சமீரா, திசர பெரேரா, சசித்ரா சேனநாயகே, ரங்கனா ஹேரத், ஜெப்ரே வன்டர்சே.

Previous articleஇலங்கை வான் பரப்பில் மற்றுமொரு கூகுள் பலூனை செலுத்த முடிவு…!
Next articleமீண்டும் விஜய்யுடன் மோதவிருக்கும் விஷால்