ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய ஒரு கருவியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி ஜூட் தவசீலன் என்சலேற்றா கண்டு பிடித்துள்ளார்.
இந்தக் கண்டுபிடிப்புக்காக, அகில இலங்கை ரீதியில் 2015 ஆம் ஆண்டின் புத்தாக்கப் போட்டியில், என்சலேற்றா இரண்டாமிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்கும் என்சலேற்றா, வலயமட்டத்தில் முதல் இடத்தினை பெற்று, தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தார்.
அண்மையில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய ரீதியான போட்டியில் 2 ஆம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை அவர் பெற்றுக்கொண்டார்.