தாயின் பகவத்கீதையில் ஆணையிட்டு அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற தமிழர்

srinivasan_judge11அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், முதன் முறையாக, நீதிபதி பதவியில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன், 48, பதவியேற்றுள்ளார். இவர் பகவத்கீதை மீது சத்தியபிரமாணம் எடுத்து பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியில் அமரும் முதல் இந்தியர் என்ற பெருமையை சீனிவாசன் பெற்றுள்ளார்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், நீண்ட காலமாக நீதிபதியாக பணியாற்றி வந்த அன்டோனின் ஸ்கோலியா, 79, என்பவர், மரணமடைந்தார். இதையடுத்து, அந்த இடத்திற்கு, புதிய நீதிபதி ஒருவரை நியமிக்க, அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தி வந்தார்.

அமெரிக்காவில், ‘கோர்ட் ஆப் அப்பீல்ஸ்’ எனப்படும் இரண்டாவது பெரிய கோர்ட்டுகளில் இருந்து தான், சுப்ரீம் கோர்ட்டிற்கான நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்திய வம்சாவளி தமிழரான சீனிவாசன் என்பவர், கொலம்பியாவில் உள்ள, கோர்ட் ஆப் அப்பீல்சில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனத்திற்காக பரிசீலிக்கப்படுவோரில், சீனிவாசன் பெயரும் இடம் பெற்றது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனம் தொடர்பாக செனட் சபை உறுப்பினர்களுக்கும், ஒபாமாவிற்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி காலியிடத்திற்கு, முற்போக்கு சிந்தனையும், பன்முக தன்மையும் உடைய நபரை தேர்வு செய்ய, ஒபாமா விரும்புகிறார்.

அவரது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சீனிவாசன் இருப்பதால், அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.

இதனை உறுதி செய்யும் விதமாக ஒபாவும் சீனிவாசன் பெயரை முன்மொழிந்தார். இதனை இரு அவைகளும் ஏற்றதை அடுத்து சீனிவாசன் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தனது தாய், குழந்தைகளுடன் பதவியேற்று விழாவிற்கு சீனிவாசன் சென்றார். அப்போது அமெரிக்க முறைப்படி நீதிபதியாக சீனிவாசன் பதவியேற்றார். இருந்தும், தனது தாய் பகவத்கீதையை ஏந்தி நிற்க, அதன் மீது ஆணையிட்டு சீனிவாசன் பதவியேற்றார்.

திருநெல்வேலியை சேர்ந்தவர்:
சீனிவாசனின் பூர்வீகம், திருநெல்வேலி அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரம். சீனிவாசனின் தந்தையான பத்மநாபன் ஸ்ரீகாந்த், மேல திருவேங்கடநாதபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பின், வேலைக்காக சண்டிகர் சென்றார்; அங்கு, சீனிவாசன் பிறந்துள்ளார்.

பின், 1960ல், கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறை பேராசிரியர் பணி கிடைத்ததையடுத்து, பத்மநாபன் ஸ்ரீகாந்த், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், அமெரிக்காவில் குடியேறினார். சீனிவாசனின் தாய் சரோஜா, அதே பல்கலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராக பணியாற்றினார். சீனிவாசன், ஸ்டான்போர்டு பல்கலையில், சட்டம் படித்தவர்.

Previous articleமட்டு. சிசிலியா மாணவி கண்டுபிடிப்பில் சாதனை
Next articleசரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் 58வது படை பிரிவில் உள்ளதா? தெரியாது என்கிறார் இராணுவ பேச்சாளர்