எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள் இங்கிலாந்து சுற்றி வளைப்பு

1017699781இங்கிலாந்து விமான எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய போர் விமானங்களை ஆர்.ஏ.எஃப் ஜெட் விமானம் இடைமறித்த சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ஜெட் விமானங்கள் இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள லின்கோல்ஷிர் நாட்டின் கோனிங்ஸ்பை ராயல் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் அட்லாண்டிக் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள் தைபூன் ஜெட் விமானங்களால் இடைமறிக்கப்பட்டது.

இங்கிலாந்து எல்லைக்குள் பறக்க முயன்றதாக கடந்த 12 மாதங்களில் மட்டும் ரஷ்ய போர் விமானங்கள் இதுவரை 6 முறை இடைமறிக்கப்பட்டுள்ளது.

Previous articleசரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் 58வது படை பிரிவில் உள்ளதா? தெரியாது என்கிறார் இராணுவ பேச்சாளர்
Next article14 பேரைக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதியின் ஆப்பிள் போன் பாஸ்வேட்டை கொடுக்க மறுக்கும் ஆப்பிள் நிறுவனம் !