யாழில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது – 9 கிலோ கஞ்சாவுடன் கொழும்பில் ஒருவர் கைது

rags_arrest_001யாழ்.பண்ணைப் பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சா பொதியுடன் 3 சந்தேக நபர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு துறை பொலிஸார் நேற்று மாலை 8.30 மணிக்கு கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நேற்றய தினம் மாலை 8.30 மணியளவில் யாழ்.பண்ணைப் பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் 3 நபர்கள் குறித்த கஞ்சா பொதிகளை கை மாற்றுவதற்காக நின்றிருந்த நிலையில், புலனாய்வுத் துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 26கிலோ கஞ்சா மற்றும் 3 கைத்தொலைபேசிகள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளது.

9 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று (18) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கொட்டஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குணாநந்த மாவத்தையில் வைத்து இந்த நபரை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபரிடமிருந்து 9 கிலோ 379 கிராம் கேரள கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

48 வயதான குறித்த நபர் கொட்டஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார் இவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Previous article14 பேரைக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதியின் ஆப்பிள் போன் பாஸ்வேட்டை கொடுக்க மறுக்கும் ஆப்பிள் நிறுவனம் !
Next articleகாயங்களுடன் மருத்துவமனையில் சிம்பு!