நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் கொக்கேன் மற்றும் விசேட காளான் வகையை பயன்படுத்தி ஆபத்தான மருந்து உற்பத்தியில் ஈடுபட்டிருந்த வீடொன்றை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயதுடைய இளம் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , குறித்த போதைப்பொருட்கள் அமெரிக்காவில் இருந்து இந்நாட்டுக்கு வருகைத் தந்த வௌிநாட்டு பெண்ணொருவரினால் இவை கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றிவளைப்பின் போது குறித்த வீட்டில் இருந்து மருந்து பெக்கட்டுக்கள் 27 ம் மற்றும் மேலும் மருந்துகள் அடங்கிய சிறிய போத்தல்கள் 42ம் கைப்பற்றப்பட்டுள்ளன.