மன்னாரில் படையினர் தங்களை இரகசியமான முறையில் பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சமுக அமைப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன.
மன்னார் நகர சபை எல்லை 27 சதுரகிலோமீற்றர் பரப்புக்குள் அடங்கினாலும், அங்கு 15 படைத்தளங்கள் உள்ளன.
அவற்றில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான துருப்பினர் தங்கியுள்ளனர்.
குறித்த தளங்கள் பல தற்காலிக முகாம்களாக இருந்த போதும், அவை கடந்த 30 நாட்களில் நிரந்தரமுகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த செயற்பாடுகள் மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.