ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரைக் கொல்லும் நபரை நான் திருமணம் செய்வேன் பிரபல நடிகை அறிவிப்பு

isis-leader-marrigeஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைபப்பின் தலைவர் பாக்தாதியை கொலை செய்யும் நபரை திருமணம் செய்து கொள்வேன் என்று எகிப்தை சேர்ந்த பிரபல நடிகை எல்ஹாம் ஷாஹின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை கொலை செய்யும் நபரை நான் திருமணம் செய்து கொள்வேன். அவர் யாராக இருந்தாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. திருமணத்திற்கான அனைத்து செலவையும் நானே ஏற்பேன்.

அத்துடன் அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத அளவுக்கு மகிழ்ச்சிகரமான தேனிலவை கொண்டாடலாம். அவர் விரும்பும் இடத்திற்கு நான் செல்வேன். அவரின் சேவகியாக இருப்பேன்.

பாக்தாதியை கொலை செய்தால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் அமைதி திரும்பும் என்றார். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ள ஷாஹின் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசற்று முன்னர் கத்தி, துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க வந்தவர்களை மடக்கி பிடித்த போலீசார்.
Next articleபிணைக்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்: கோஹ்லி ரசிகர் ஏமாற்றம்