பிணைக்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்: கோஹ்லி ரசிகர் ஏமாற்றம்

virat_umar_002தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கோஹ்லி ரசிகரின் பிணை கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.
பாகிஸ்தானில் சொந்த வீட்டின் மேலே இந்திய தேசியக் கொடியை ஏற்றிய குற்றத்திற்காக விராட் கோஹ்லியின் தீவிர ரசிகருக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம்.

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசாரின் கருத்துக்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குடியிருந்து வருபவர் 22 வயதான உமர் டரஸ். இந்திய அதிரடி நாயகன் விராட் கோஹ்லியின் தீவிர விசிறி அவர்.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் உமர் இந்திய தேசியக் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.

துடுப்பாட்டத்தின் மீதான ஈடுபாடும் விராட் கோஹ்லியின் தீவிர விசிறியாக இருப்பதால் மட்டுமே தாம் இந்திய தேசியக் கொடியை ஏற்றியுள்ளதாக உமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சமூக ஆர்வலர்கள் சிலர் உமருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர், இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றனர்.

Previous articleஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரைக் கொல்லும் நபரை நான் திருமணம் செய்வேன் பிரபல நடிகை அறிவிப்பு
Next articleமைத்திரி படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்.