மைத்திரி படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்.

Maithripala-Sirisenaசெய்தி- புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் அனைவரும் இலங்கை திரும்பிவர ஜனாபதி மைத்திரி அழைப்பு விடுத்திருக்கின்றார்

ஜெர்மனி சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையரை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் ஏற்கனவேயும் இதுபோன்று அழைப்பு விடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிச் சென்ற சோசலிசமுன்னனி தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த நான்கு மாதமாக அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

ஒருபுறம் இலங்கையர்கள் திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி மறுபுறம் அவ்வாறு வந்த குமார் குணரட்னத்தை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜெர்மனியில் கிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் சாமாதிகளைப் பார்த்து இரங்கியுள்ளாராம்.

ஆனால் இலங்கையில் பல்லாயிரம் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்ல அவர்களுடைய நினைவு சின்னங்களும் புல்டோசர்களால் அழிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. ஆனால் இலங்கை ஜனாதிபதி ஜெர்மனியில் இறந்த யூதர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

இதைத்தான் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்றார்களோ….?

Previous articleபிணைக்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்: கோஹ்லி ரசிகர் ஏமாற்றம்
Next articleபெல் 206 ரக ஹெலிகொப்டர் கடலில் உடைந்து விழுந்து