திருமண உறவுக்கு முரணான தொடர்பு: மாமியாரை கொலை செய்த பெண்

1455945085_63903கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண்ணொருவர் தொடர்பான அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின், தூத்துக்குடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலையை புரிந்த பெண் 35 வயதான 2 பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ தினத்தன்று காலை 9 மணியளவில் குறித்த பெண், தனது கணவர் அந்தோணியை தொடர்பு கொண்டு, ‘உங்கள் அம்மா கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார். உடனே வாருங்கள்’ என்றுள்ளார்.

இதனால் கணவர் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது, தனது தாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தாயின் மூக்கு, வாய் பகுதியில் இரத்தக்காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த அவர், உடனே இதுபற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவத்தின்போது வீட்டில் மனைவி மட்டும் தனியாக இருந்ததால் அவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில், மாமியாரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

பொலிஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–

“எனது கணவர் தினமும் காலை 7 மணிக்கு கடைக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வருவார். அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்தோணி கடைக்கு சென்றதும் அந்த வாலிபரை வீட்டுக்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்தோம். இதுபற்றி அறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். இருப்பினும் நான் அந்த வாலிபருடனான பழக்கத்தை விடவில்லை.

இதனால் என்னை கண்காணிக்க 6 மாதங்களுக்கு முன்பு தனது தாயை ஊரில் இருந்து அழைத்துவந்தார். அப்போது மாமியார் அந்த வாலிபர் வீட்டுக்கு வந்து செல்வதை எனது கணவரிடம் கூறினார். இதனால் எனது கணவர் என்மீது கோபம் அடைந்து திட்டினார்.

என்னைப்பற்றி எனது கணவரிடம் கூறியதாலும், எனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும் தலையணையால் அமுக்கிமாமியாரை கொலை செய்தேன். அப்போதும் ஆத்திரம் தீராமல் அவரது முகத்தில் தாக்கினேன். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.”

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Previous articleஐங்­க­ர­நேசனிற்கு பிடியாணை…?
Next articleகிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்…?