விடாமல் விரட்டும் பெண்: அம்பலப்படுத்திய அஸ்வின்

ashwin_meet_002இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தன்னை ஒரு ரசிகை தீவிரமாக பின் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் எதிரணிகளை தனது மாயாஜால பந்தால் கலங்கடித்து வருகிறார்.

தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு ரசிகர்களைப் போலவே ஏராளமான ரசிகைகளும் உள்ளனர்.

இந்நிலையில் தன்னை ஒரு ரசிகை தீவிரமாக பின் தொடர்ந்து வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் நடந்த ’லைவ் சாட் (Live chat)‘ நிகழ்ச்சியின் போது அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அவர் பெயர் ஸ்மிருதி சின்ஹா. ஆனால் இவர் தான் என்னை டுவிட்டரில் தொடர்ந்து வருபவரா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அந்த ஸ்மிருதி, உங்களது தாக்குதல் ஆயுதங்களின் வரிசையில் புதிதாக ஏதும் உள்ளதா? என்று கேட்டிருந்தார்.

இதற்கு அஸ்வின், “துடுப்பாட்ட வீரர்களின் இன்சைட் மற்றும் அவுட்சைட் எட்ஜை சரியாக கணித்து என்னால் பந்தை சுழல விட முடியும்.

இப்போதைக்கு இருக்கும் உத்திகளிலும் பெரிய அளவில் மாற்றம் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

Previous articleகளவைப் பிடிக்க மகிந்தவின் ஊரிற்கு சென்ற ரணில்….
Next articleதெறி வியாபாரத்தில் நடந்த குழப்பம்- தயாரிப்பாளர் விளக்கம்