ஜனாதிபதி நாளை மறுதினம் முதலமைச்சர் சி.வியைச் சந்திக்கிறார்

mathri-jaffnaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜேர்மன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று சனிக்கிழமை இரவு நாடு திரும்புகின்றார்.

நாடு திரும்பிய நிலையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

Previous articleமங்களவை மிரட்டிய இராணுவ மேஜர்
Next articleராஜபக்சவினருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்த போகும் பொன்சேகா