ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் தேசிய இயந்திர உபகரண நிறுவனம் ஆகியவை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் முன்னர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இருந்தது.

மேலும், தேசிய இயந்திர உபகரண நிறுவனம் முன்னர் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் கீழ் இருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகாலநிலை தொடர்பான அறிவிப்பு!
Next articleநீரில் மூழ்கிய 12 வயது சிறுவன் உயிரிழப்பு!