பதவியை உதறித் தள்ளிய சங்கக்காரா.. ’இந்திய மலிங்கா’வுக்கு உதவி செய்த டோனி: கிரிக்கெட் துளிகள்!

cric_news_001இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து நாட்டிற்கான இலங்கையின் உயர் ஆணையர் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார்.
குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் போது பரிசளிப்பு விழாவில் பேசிய இலங்கை ஜனாதிபதி சிறிசேனா, சங்கக்காராவை இங்கிலாந்தின் இலங்கை தூதராக நியமிக்கவுள்ளதாக மைதானத்திலே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவின் பிரத்தியேக செயலாளர் பாலித பெல்போல, சங்கக்காராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்டுள்ளார்.

ஆனால் வேலைப்பளுவினாலும் சில தனிப்பட்ட காரணங்களாலும் தன்னால் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சங்கக்காரா கூறிவிட்டாராம்.

இலங்கையை ஒயிட்- வாஷ் செய்தது இந்தியா

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

கடைசி பந்தில் தென்ஆப்பிரிக்கா ’திரில்’ வெற்றி: இங்கிலாந்துக்கு ஏமாற்றம்

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று கேப்டவுன் நகரில் நடந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா 18.5 ஓவரில் 119 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தவித்தது.

கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடி தென்ஆப்பிரிக்காவை வெற்றி பெறச் செய்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்த பொண்டிங்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்குப் பிறகு மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் கூறியுள்ளார்.

பும்ராவுக்கு உதவிய டோனி

இந்தியாவின் மலிங்கா என பாராட்டப்படும் இளம் பந்துவீச்சாளர் பும்ரா, இந்திய அணித்தலைவர் டோனி தனக்கு பெரிதும் உதவியதாகவும், அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஊக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், அணித்தலைவர் நமது பின்னால் இருக்கும் போது களத்தில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Previous articleரஷ்யாவுடன் மோதினால் உதவிக்கு வரமாட்டோம்: துருக்கிக்கு நேட்டோ நாடுகள் எச்சரிக்கை
Next articleமுன்னணி நடிகர்களின் படங்களின் முதல் நாள் வசூலை முந்திய மிருதன்- ஆச்சரியத்தில் கோலிவுட்