ஒருநாள் போட்டியில் 306 ஓட்டங்கள் விளாசி இந்திய வீரர் உலகசாதனை!

new_record_001இந்தியாவில் நடந்த உள்ளூர் போட்டியில் மகாராஷ்டிரா துடுப்பாட்ட ஒருவர் 306 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சீனியர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பி.ஒய்.சி ஹிந்து ஜிம்கான- நன்டிடைட் அணிகள் மோதின.

இதில் பி.ஒய்.சி ஹிந்து ஜிம்கான அணிக்காக அதிரடியாக விளையாடிய பிரிதம் பாடில் 28 பவுண்டரி, 26 சிக்சர்கள் என 306 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இதில் 6 பந்துகளை மைதானத்திற்கு வெளியே அடித்து அவர் தொலைத்து விட்டாராம்.

இதனால் பி.ஒய்.சி ஹிந்து ஜிம்கான 6 விக்கெட் இழப்பிற்கு 594 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நன்டிடைட் 86 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பி.ஒய்.சி ஹிந்து ஜிம்கான 508 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பி.ஒய்.சி அணியின் பயிற்சியாளர் ரஞ்சித் பாண்டே கூறுகையில், 50 ஓவர் போட்டியில் ஒரு வீரர் 300 ஓட்டங்களை குவிப்பது இதுவே முதன்முறையாகும். அதே போல் 508 ஓட்டங்களால் வெற்றி என்பதும் புதிய சாதனையே என்று கூறியுள்ளார்.

பிரிதம் பாடில் அதிரடியை பார்த்து வியந்து போன மகாராஷ்டிரா அணியின் மற்றொரு அதிரடி துடுப்பாட்ட வீரரான கெடார் ஜாதவ் தன்னுடைய புதிய 25 ஆயிரம் மதிப்புள்ள துடுப்பாட்ட மட்டையை அவருக்கு பரிசளித்துள்ளார்.

கெடார் ஜாதவ் 2014ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானவர். 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜாதவ், 1 சதத்துடன் 146 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

Previous articleகுடாநாட்டு மக்களை மிரள வைத்த மிக் போர் விமானங்கள் வெளியாகும் காரணம்
Next articleவிமான நிலைய சோதனையில் சிக்காத ஆயுதங்களை தயாரிப்பது எப்படி? வீடியோவால் பொலிசில் சிக்கிய நபர்!