விமான நிலைய சோதனையில் சிக்காத ஆயுதங்களை தயாரிப்பது எப்படி? வீடியோவால் பொலிசில் சிக்கிய நபர்!

weaponman_arrest_004விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ஸ்கேன் பரிசோதனையில் சிக்காத வகையில் இருக்கும் ஆயுதங்களை தயாரிப்பது எப்படி என்பது குறித்து வீடியோவை வெளியிட்ட குற்றத்திற்காக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் Jaen நகரில் வசித்து வரும் இந்நபர், தனது வீட்டில் வைத்து ஆயுதங்கள், வெடிபொருட்களை தயாரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ஸ்கேன் பரிசோதனையில் சிக்காத வகையில் இருக்கும் ஆயுதங்களை தயாரிப்பது எப்படி என்பது குறித்த வீடியோவை யூடியுபில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோ 700,000 முறை பார்க்கப்பட்டுள்ளது, இதுகுறித்து அறிந்த பொலிசார் அந்நபரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் போன்றவவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து அந்நபரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள பொலிசார், அவர் தொடர்பான தகவல்கள் எதைனையும் வெளியிடமறுத்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், விமான நிலைய ஸ்கேனர்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகளால் கண்டறியப்பட முடியாத அளவுக்கு, சில ஆயுதங்களை வடிவமைத்துள்ளார்.
மேலும், ஏராளமான ஆயுதங்களை இந்நபர் இணையதளம் வாயிலாக விநியோகம் செய்துள்ளார்.

தச்சரின் மகனான இவர், கடந்த 2010 ஆண்டு முதல் யூடியுபினை பயன்படுத்தி வருகிறார், அவற்றில் நூற்றுக்கணக்கான விடயங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

எவ்வாறு நீச்சல் குளத்தினை அமைப்பது, வீட்டின் பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் Vagineitor உபகரணங்களை தயாரிப்பது, அபாயகரமான வில்(Lethal Bow) போன்ற தயாரிப்புகள் அந்த வீடியோவில் உள்ளன.

Previous articleஒருநாள் போட்டியில் 306 ஓட்டங்கள் விளாசி இந்திய வீரர் உலகசாதனை!
Next articleஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி செனட்டர் ஆகிறார்