பணத்திற்காக மகளை விற்ற தாய்!

பதினான்கு வயது மகளை விற்பனை செய்த தாய் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரான தாய்க்கு நான்கு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசாரணை

ஒருவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க இடமளித்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமி 10ஆம் ஆண்டு படித்து வருவதாகவும் இந்த சட்டவிரோத செயலை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் சிறுமி நடந்த சம்பவத்தை ஆசிரியை ஒருவரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகாதல் உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவெடுத்த மாணவி!
Next articleயாழில் கடும் வெப்பத்தால் நபர் ஒருவர் உயிரிழப்பு!