மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் உள்ள கிராமங்கள் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன.
பொலனறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து சிங்கள குடும்பங்கள் அழைத்து வருப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் அங்கு கிராமங்கள்தோறும் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு, பிக்குகள் தங்கவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டக்களப்பு மாவட்டத்தை முழுமையாக சிங்கள மாவட்டமாக மாற்றும் அரசாங்கம் இனவழிப்பு செயற்பாடுகளில் ஒன்று என்று தமிழ் பொது அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.