எனது அதிர்ஷ்டம்: மெக்கல்லமை பாராட்டிய டோனி

mccullum_dhoni_001டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்த மெக்கல்லமிற்கு இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா -நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 370 ஓட்டங்கள் குவித்தது. இதில் அந்த அணியின் தலைவர் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து உலகசாதனை படைத்தார்.

இது பற்றி இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், மெக்கல்லம் மிகச் சிறந்த வீரர். அவர் டெஸ்டில் அடித்த அதிவேக சதத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் டெஸ்ட், ஒருநாள் போட்டியில் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்.

நானும், அவரும் சென்னை அணிக்காக விளையாடி இருக்கிறோம். அவருடன் ’டிரெசிங் ரூமில்’ அனுபவத்தை பகிர்ந்து கொண்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

Previous articleஇலங்கைப் பயணம் குறித்து ஜெனிவா கூட்டத்தொடரில் விளக்கமளிப்பார் அல் ஹுசேன்
Next article1986ஆம் ஆண்டு இராணுவம் பிடித்துச்சென்ற கணவன் மகன் எங்கே?