குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இந்து, பௌத்த மதகுருமாருகளுக்கிடையில் ரகசிய கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் நடைபெற்றது. 

இதில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களுக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாக விகாரையில் வியாழக்கிழமை (17) காலை இந்த  கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடைபெற்றது.

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleதாய் பேசவில்லை என உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பஸ்தர்
Next articleயாழில் கர்ப்பப்பை வெடித்ததில் பெண் உயிரிழப்பு!