முல்லைத்தீவு கடற்பகுதியில் 2016ஆம் ஆண்டு சிங்கள மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மீனவர் சங்கத் தலைவர் மரியதாஸ் தெரிவித்துள்ளார்.
அத்துமீறிய மீன்பிடியால் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டதன் பின்னர் கடற்பரப்பில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடமுடியாத நிலையே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் வாழ்வு கடலை நம்பியே காணப்படுவதாகவும் எனினும் தொடர்ச்சியான அத்துமீறல் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்,
சிங்கள மீனவர்களின் அத்தமீறிய நடவடிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் முறையிட்டபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஏமாற்றமே தமக்கு கிடைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.